கடையில் பணம் திருடியவர் கைது


கடையில் பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2021 9:49 PM GMT (Updated: 2021-09-12T03:19:09+05:30)

கடையில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி:
திருச்சி முதலியார் சத்திரம் அலம் தெருவை சேர்ந்தவர் குமரகிரி (வயது 60). இவர் தென்னூர் அண்ணா நகர் சிவப்பிரகாசம் சாலையில் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். சம்பவத்தன்று குமரகிரி தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த கடையில் பணத்தை திருடியது திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காஜா தோப்பு பகுதியை சேர்ந்த பிரியாணி என்ற மன்சூர் அலி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மன்சூர் அலி மீது கண்டோன்மெண்ட், கோட்டை, காந்தி மார்க்கெட், பொன்மலை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story