என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் திருட்டு
என்ஜினீயர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூரை அடுத்த குண்டூர் ஊராட்சியில் உள்ள அய்யனார் நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் சதீஷ்(வயது 51). சிவில் என்ஜினீயரான இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நடந்த தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றார். பின்னர் சதீஷ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி நவல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நேற்று காலை அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு, 4 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் உண்டியலில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. அந்த வீட்டிற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர் சதீஷ் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தார். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story