வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 12 Sept 2021 3:22 AM IST (Updated: 12 Sept 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள பொன்னம்பட்டி மந்தை தெருவை சேர்ந்தவர் செல்வபிரபு(வயது 25). கூலித்தொழிலாளியான இவர் பழைய வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள புதிய வீட்டிற்கு சென்று அங்கு இரவில் தூங்கினார். மீண்டும் காலையில் பழைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் துவரங்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story