கொதிக்கும் எண்ணெய் கொட்டி வாலிபர் படுகாயம்; ஓட்டல் ஊழியர் கைது


கொதிக்கும் எண்ணெய் கொட்டி வாலிபர் படுகாயம்; ஓட்டல் ஊழியர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2021 9:52 PM GMT (Updated: 2021-09-12T03:22:38+05:30)

கொதிக்கும் எண்ணெய் கொட்டி வாலிபர் படுகாயமடைந்தது தொடர்பாக ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி:
திருச்சி செந்தண்ணீர்புரம் குமரன் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 30). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அங்கு சாப்பிட்டு பின்னர், பணத்தை பிறகு தருவதாக அவர் கூறியுள்ளார். இதனால் ஓட்டல் ஊழியர் ஆட்டுக்கார தெருவை சேர்ந்த பிரகாஷ்(41) என்பவருக்கும், ராஜபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராஜபாண்டி கடையில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து பிரகாஷ் மீது ஊற்ற முயன்றுள்ளார். இதனை பிரகாஷ் தடுத்தபோது, கொதிக்கும் எண்ணெய் ராஜபாண்டி மீது கொட்டியது. இதில் உடல் முழுவதும் காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

Related Tags :
Next Story