ராதாபுரம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு


ராதாபுரம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 11 Sep 2021 10:26 PM GMT (Updated: 2021-09-12T03:56:56+05:30)

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

ராதாபுரம்:
ராதாபுரம் அருகே உள்ள காரியகுளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். மேலும் இவர் காரியாகுளத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இங்கு சிகரெட் கேட்டு அதே பகுதியை சேர்ந்த கண்ணன் வந்துள்ளார். சிகரெட் இல்லை என்று கூறியதால் ஆத்திரத்தில் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் இடது கையில் 3 விரல்கள் துண்டானது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story