மாவட்ட செய்திகள்

தென்காசி மாவட்டத்தில்இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு + "||" + In the Tenkasi district Emanuel Sekaran Memorial Day Adjustment

தென்காசி மாவட்டத்தில்இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்டத்தில்இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசி மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இமானுவேல் சேகரன் நினைவு தினம்
தென்காசியில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு அவரது படத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, அன்பழகன், சிவனு பாண்டியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழர் விடுதலை களம் சார்பில் இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாநில துணைத் தலைவர் ஆர்.சாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மேற்கு மாவட்ட தலைவர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன், வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
செங்கோட்டை-கடையநல்லூர்
செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூரில் தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் படத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, பொறுப்புக் குழு உறுப்பினர் சுந்தரமகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் ரஜப் பாத்திமா, நகர செயலாளர்கள் கடையநல்லூர் சேகனா, செங்கோட்டை ரஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடையம் அருகே மாலிக் நகரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், பேரூர் செயலாளர் பொன்ஸ், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.