மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மூதாட்டி பலி 3 பேர் காயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மூதாட்டி பலி 3 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Sept 2021 4:05 AM IST (Updated: 12 Sept 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதல்மூதாட்டி பலி 3 பேர் காயம்

நாங்குநேரி:
நாங்குநேரி பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் மனைவி சுந்தராட்சி (வயது 87). பூ வியாபாரி. இவர் பாணான்குளம் அருகே  முதலைக்குளத்தில் நடைபெற்ற கோவில் விழாவில் பூமாலைகள் விற்பனை செய்து விட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த முருகன் (40) என்பவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார். முதலைக்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் சுந்தராட்சி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுந்தராட்சி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த முருகனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த பாளையங்கோட்டையை சேர்ந்த 17 வயதான 2 சிறுவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story