வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடி திருவிழா
விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு யாதவ மகா சபை சார்பில் உறியடி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் உற்சவமூர்த்தி திருவேங்கடமுடையான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. .இதைத்தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story