கிருஷ்ணகிரி அணையில் 80 விநாயகர் சிலைகள் கரைப்பு போலீசார் தீவிர பாதுகாப்பு


கிருஷ்ணகிரி அணையில் 80 விநாயகர் சிலைகள் கரைப்பு போலீசார் தீவிர பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 Sept 2021 11:09 PM IST (Updated: 12 Sept 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் வீட்டில் வைத்து வழிபட்ட 80 விநாயகர் சிலைகள் நேற்று கே.ஆர்.பி. அணையில் பொதுமக்கள் கரைத்தனர். இதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வீட்டில் வைத்து வழிபட்ட 80 விநாயகர் சிலைகள் நேற்று கே.ஆர்.பி. அணையில் பொதுமக்கள் கரைத்தனர். இதையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா 
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் கடைகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகைளை வைத்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது நாளான நேற்று பொதுமக்கள் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தனர்.
கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் வீடுகளில் வைத்திருந்த சிறிய விநாயகர் சிலை மற்றும் 3 அடி வரையிலான விநாயகர் சிலைகளை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் பின் பகுதியில் கரைத்தனர். இதையொட்டி அணையின் பின்புறம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சிலையை கரைக்க ஒன்றிரண்டு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி
மேலும் இந்து முன்னணி சார்பில் 20-க்கும் மேற்பட்ட சிலைகளை ஊர்வலம் இன்றி காரில் கொண்டு வந்து கிருஷ்ணகிரி அணையில் கரைத்தனர். நேற்று மாலை வரை 80 விநாயகர் அணையில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதனால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். இதனிடையே அந்த சிலையை நிர்வாகிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று தளி ஏரியில் கரைத்தனர். இதேபோல் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வைத்து வழிபட்ட சிலைகளை எடுத்து சென்று ஏரியில் கரைத்தனர்.

Next Story