ஒரே நாளில் 27 இடத்தில் தடுப்பூசி முகாம்
சிவகங்கையில் நேற்று ஒரே நாளில் 27 இடத்தில் தடுப்பூசி நடைபெற்றது. முகாமை செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் நேற்று ஒரே நாளில் 27 இடத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.
முகாம்
தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் 700 இடங்களில் முகாம் நடை பெற்றது. சிவகங்கை நகரில் 27 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
இதை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் சிவகங்கை தெப்பக்குளம் அருகே நடைபெற்ற முகாமிலும் சிவகங்கை இந்திரா நகரில் நடைபெற்ற முகாமையும் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வமணி, நகர் அ.தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
இதேபோல சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை கோவில் தெருவில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார். சிவகங்கை நகராட்சி ஆணை யாளர் அய்யப்பன், கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தாசில்தார் தர்மலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசுவரன் ஆகியோர் 27 முகாம்களிலும் பார்வையிட்டனர்.
தடுப்பூசி
இதுதவிர சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற முகாமை மருத்துவ கல்லூரி டீன் ரேவதி பாலன் தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபி ஆகியோர் மேற்பார்வையில் நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் சிவகங்கை அடுத்த நாலுகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் முதலில் கலந்துகொண்ட 50 பேருக்கு கிராம கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அறக் கட்டளை சார்பில் வழங்கப்பட்ட குடம் மற்றும் முக கவசங்களை ஊராட்சி தலைவர் மணிகண்டன் தலைமையில் சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம் பரிசு வழங்கினார்.
Related Tags :
Next Story