தென்னம்பாளையம் சந்தையில் 80 டன் மீன்கள் நேற்று விற்பனையானது.
தென்னம்பாளையம் சந்தையில் 80 டன் மீன்கள் நேற்று விற்பனையானது.
திருப்பூர்,:
தென்னம்பாளையம் சந்தையில் 80 டன் மீன்கள் நேற்று விற்பனையானது.
சந்தை
திருப்பூர் தென்னம்பாளையத்தில் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்கி செல்வது வழக்கம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கும். விடுமுறை தினம் என்பதால் பலரும் அதிகாலை முதலே மீன் மற்றும் இறைச்சிகளை வாங்க பலரும் செல்வார்கள்.
தற்போது கொரோனா பாதிப்பு என்பதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று மீன் சந்தையில் மீன்பிரியர்கள் மீன் வாங்க குவிந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. சந்தைக்கு ஆந்திரா, கேரளா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. மீன் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
80 டன் மீன்கள் விற்பனை
இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு நேற்று 50 டன் கடல் மீன்கள் மற்றும் 30 டன் அணை மீன்கள் என மொத்தம் 80 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. மததிய மீன் ஒரு கிலோ ரூ.150-க்கும், சங்கரா ரூ.300-க்கும், இறால் ரூ.400-க்கும், விளாமீன் ரூ.350-க்கும், வஞ்சரம் ரூ.800-க்கும், வாவல் ரூ.900-க்கும். பாறை ரூ.500-க்கும், முறால் ரூ.350-க்கும், நண்டு (முதல் ரகம்) ரூ.350-க்கும், இரண்டாம் ரகம் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்ப்டடது. அடுத்த வாரம் புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதால் மீன் விற்பனை நன்றாக நடந்தது. 80 டன் மீன்களும் விற்பனையாகின.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story