காரத்தொழுவு ஊர்ப்புற நூலகத்தில் கான்கிரீட் சிலாப் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.


காரத்தொழுவு ஊர்ப்புற நூலகத்தில் கான்கிரீட்  சிலாப் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
x
தினத்தந்தி 12 Sept 2021 11:36 PM IST (Updated: 12 Sept 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

காரத்தொழுவு ஊர்ப்புற நூலகத்தில் கான்கிரீட் சிலாப் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

போடிப்பட்டி, 
காரத்தொழுவு ஊர்ப்புற நூலகத்தில் கான்கிரீட்  சிலாப் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த கட்டிடத்தின் பல பகுதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பலத்த காயம்
மடத்துக்குளத்தையடுத்த கணியூர் அரியநாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவருடைய மனைவி காரத்தொழுவிலுள்ள ஊர்ப்புற நூலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று மனைவியை நூலகத்தில் கொண்டு போய் விடுவதற்காக குழந்தைவேலு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது நூலகத்தின் கதவை மனைவியால் திறக்க முடியாததால் இவர் திறக்க முயற்சித்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக கதவுக்கு மேல் இருந்த கான்கிரீட்  சிலாப் முழுவதுமாக உடைந்து குழந்தைவேலுவின் மீது விழுந்தது. இதில் தலை, கால் மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த குழந்தைவேலுவை அருகிலிருந்தவர்கள் மீட்டு கணியூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த நூலகத்தின் மேற்கூரை இன்னும் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பழுதடைந்த கட்டிடம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- 
கடந்த 2003-ம் ஆண்டு காரத்தொழுவு பகுதியில் நூலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பெரும் முயற்சி எடுத்தோம். இதற்கென 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்து, தனி நபர் ஒருவரிடம் நன்கொடையாக இந்த இடத்தைப் பெற்று, பொது நூலகத்துறைக்கு விண்ணப்பித்தோம். இதனையடுத்து பொதுமக்களின் தொடர் முயற்சியால் ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் செலவில் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் கடந்த 06-06-2006 அன்று ஊர்ப்புற நூலகம் திறக்கப்பட்டது. ஆனால் தொடர் பராமரிப்பு இல்லாமல் இந்த கட்டிடம் பல இடங்களில் சேதமடைந்து உள்ளது. மேலும் கதவு, ஜன்னல்களும் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது.இதனால் பொதுமக்கள் இந்த நூலகத்துக்குச் செல்லவே அச்சமடையும் நிலை நீடித்து வருகிறது.எனவே நூலக கட்டிடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது நடந்துள்ள இந்த சம்பவத்துக்குப் பிறகாவது உடனடியாக நூலக கட்டிடத்தைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story