கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ½ கிலோ சீனி இடையாத்தூர் ஊராட்சியில் வழங்கப்பட்டது
இடையாத்தூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ½ கிலோ சீனி வழங்கப்பட்டது.
காரையூர்:
பொன்னமராவாதி வட்டாரம் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக ஒலியமங்கலம், காரையூர், அரசமலை, இடையாத்தூர், கொன்னையம்பட்டி, காரையூர், நல்லூர் உட்பட பொன்னமராவதி தாலுகாவில் மொத்தம் 60 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தினர். முகாமில் புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்தமிழ்செல்வன், பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களை ஆய்வு செய்தனர். இடையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமன் தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு ஒரு நபர்களுக்கு அரை கிலோ சீனி வழங்கி ஊக்குவித்தார்.
Related Tags :
Next Story