உடுமலை அருகே நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


உடுமலை அருகே நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
x
தினத்தந்தி 13 Sept 2021 12:01 AM IST (Updated: 13 Sept 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

போடிப்பட்டி, 
உடுமலை அருகே நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நோய் தாக்குதல்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேங்காய் மற்றும் கொப்பரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இந்தநிலையில் வாளவாடி உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் கருகி வருகிறது.இது விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
தற்போது உடுமலை பகுதியில் கூலித் தொழிலாளர் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.இதனால் பலரும் தென்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
கருகும் மரங்கள்
அதேநேரத்தில் தென்னை விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் மகசூல் இழப்பை சந்தித்து வருகின்றனர்.மேலும்தற்போது தேங்காய் வரத்து அதிகம் உள்ளதால் போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது. இதனால் தேங்காய்களை பல விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். இதுதவிர கொப்பரை உற்பத்தி செய்தும் இருப்பு வைத்துள்ளனர். இவ்வாறு பல்வேறுசிக்கல்களில் விவசாயிகள்சிக்கித் தவித்து வரும் நிலையில் தற்போது வாளவாடி உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் தென்னை மரங்களில் மர்ம நோய் தாக்குதல்ஏற்பட்டு ஓலைகள் கருகிவருகிறது. 
மேலும் குரும்பை உதிர்ந்து காய்ப்புத் திறன் குறைந்துள்ளது.அத்துடன் காய்களிலும் நோய்த் தாக்கம் தெரிகிறது.இந்த நோயின் தாக்கத்தால் மரம் முழுவதும் கருகி வீணாகும் அபாயம் உள்ளது.எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்றவும், நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story