ஏலகிரிமலையில் நீட் தேர்வுக்கு சென்ற மாணவனை காரில் அழைத்துச்சென்ற கலெக்டர்
ஏலகிரிமலையில் நீட் தேர்வு எழுதசென்றபோது பஸ்சை தவறவிட்ட மாணவனை கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது காரில் அழைத்துசென்றார்.
ஜோலார்பேட்டை
ஏலகிரிமலையில் நீட் தேர்வு எழுதசென்றபோது பஸ்சை தவறவிட்ட மாணவனை கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது காரில் அழைத்துசென்றார்.
மாணவனை காரில் அழைத்து சென்ற கலெக்டர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி மற்றும் ஏலகிரிமலையில் நீட் தேர்வு நடந்தது. நீட் தேர்வு மையங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அருகே அத்தனாவூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று 900 மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 834 மாணவ- மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். 66 மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வு மையத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்ய சென்றார். அப்போது பொன்னேரி கூட்ரோட்டில் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த மாணவர் வேடியப்பன் கடைசி பஸ்சை விட்டுவிட்டார். அப்போது ஆய்வுக்கு சென்ற கலெக்டர் அந்த மாணவனை தனது காரில் அழைத்து வந்து தேர்வு எழுத அனுப்பி வைத்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் பெல் டி.ஏ.வி பள்ளி தேர்வு மையத்தில் 360 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 23 பேர் தேர்வு எழுத வரவில்லை. 337 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். ஒரு அறைக்கு 12 பேர் வீதம் 30 அறைகள் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி தலைமையில், சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், ஜான் சேவியர், தாசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேல்விஷாரம் குளோபல் பொறியியல் கல்லூரியில் 240 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். அவர்கள் 17 பேர் தேர்வு எழுத வரவில்லை. 223 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இரண்டு மையங்களிலும் மொத்தம் 560 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதியுள்ளதாக நீட் ஒருங்கிணைப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story