சோளிங்கருக்கு 4 ரோப்கார் பெட்டிகள் வருைக
4 ரோப்கார் பெட்டிகள் வருைக
சோளிங்கர்
சோளிங்கரில் உள்ள யோக லட்சுமிநரசிம்மர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 2010-ம் ஆண்டு ரூ.9 கோடியே 30 லட்சத்தில் அடிவாரத்தில் இருந்து பெரியமலைக்கு ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வந்தது.
இந்தநிலையில் தற்போது கம்பி வடம் இணைக்கப்பட்டு மாதிரி கேபின்கள் அமைத்து, சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது கொல்கொத்தாவில் ரூ.10 லட்சம் மதிப்பீல் 10 கேபின்கள் செய்யும் பணிகள் முடிந்து, அந்தக் கேபின்களுக்கு தரச் சான்று வாங்கப்பட்டு, முதல் தவணையாக 4 கேபின்கள் நேற்று முன்தினம் இரவு ரோப்கார் கட்டிடத்துக்குக் கொண்டு வரப்பட்டன. மீதி 6 கேபின்கள் வந்ததும் கம்பி வடத்தில் இணைக்கப்பட்டு அமைச்சர் முன்னிலையில் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் நடக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story