திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்
1 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு வழிகாட்டுதலின் படி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று 1004 இடங்களில் நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் முதல் தவணையாக 46 ஆயிரத்து 455 பேரும், 2-ம் தவணையாக 16 ஆயிரத்து 144 பேரும் என 62 ஆயிரத்து 599 பேரும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் முதல் தவணையாக 31 ஆயிரத்து 467 பேரும், 2-ம் தவணையாக 10 ஆயிரத்து 259 பேரும் என 41 ஆயிரத்து 726 என மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேர் தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர்.
இந்த முகாம்களில் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அரசு அலுவலர்கள், தன்னார்வலர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
தற்போது அரசிடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் தடுப்பூசி போட இயலாதவர்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டு கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story