மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் 633 இடங்களில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதனையடுத்து திருவாரூர் புதிய பஸ் நிலையம், முதலியார்தெரு, பழைய பஸ் நிலையம், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் முகாம்களில் தேவையான வசதிகள் குறித்தும், தடுப்பூசி போடப்படுவது குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
633 இடங்களில்
கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பதற்கான ஒரே வழி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது தான் என்பதால்தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 633 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார்.
ஆய்வின்போது உதவி கலெக்டர் பாலசந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
திருத்துறைப்பூண்டி
கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில், திருத்துறைப்பூண்டி, தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை நகராட்சி ஆணையர் சந்திரசேகர், நகரமைப்பு ஆய்வாளர் அருள் முருகன், தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தி.மு.க. நகர செயலாளர். ஆர்.எஸ்.பாண்டியன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் கார்த்தி, கோட்டூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலஞானவேல், ரோட்டரி டெல்டா தலைவர் காளிதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
மன்னார்குடி
மன்னார்குடி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் மையங்களுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மன்னார்குடி ஒன்றியம் மேலவால், மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை ஆகிய ஊர்களில் தடுப்பூசி மையங்களை பார்வையிட்டு கூடுதலாக தடுப்பூசி தேவைப்படும் மையங்களுக்கு தடுப்பூசி மருந்துகளை மாவட்ட மருத்துவதுறை இயக்குனரிடம் உடனடியாக கூடுதல் மருந்துகள் அனுப்ப உத்தரவிட்டார். தொடர்ந்து கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் மேலநத்தம், திருமக்கோட்டை, எளவனூர், தென்பரை ஆகிய இடங்ளுக்கு சென்று ஆய்வு செய்தார். இதில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் தன்ராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, உதவி திட்ட இயக்குனர் தமிழ்மணி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், மன்னார்குடி சிவகுமார், பக்கிரிசாமி, கோட்டூர் ஒன்றிய ஆணையர் சாந்தி, ஒன்றிய குழு உறுப்பினர் எம்.என்.பாரதிமோகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story