படுகொலை செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்
வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நகர மன்ற உறுப்பினர் குடும்பதிற்கு ரூ.20 லட்சமும், அவருடைய மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறினார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நகர மன்ற உறுப்பினர் குடும்பதிற்கு ரூ.20 லட்சமும், அவருடைய மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறினார்.
ஆறுதல் கூறினார்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கொலை செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் வீட்டுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நேரில் சென்று அவருடைய தாய் மற்றும் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ஓயமாட்டோம்
சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைத்தலங்களில் பரவிய காட்சிகளை பார்க்கும்போது நெஞ்சங்களை பிளவு படுத்தும் வகையில் உள்ளது,
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தமாதமின்றி கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை ஆரம்பத்தில் பரபரப்பாக ஆர்வம் காட்டி பின்னர் நீர்த்து போக செய்துவிட கூடாது. அதை ஒரு போதும் மனித நேய ஜனநாயக கட்சி அனுமதிக்காது.
குற்றவாளிகள் 3 மாதம் தண்டனை பெற்று பின்னர் வெளியே வரலாம் என்று கருதினால் சட்டத்தின் துணைக் கொண்டு ஜனநாயக வழியில் தண்டனை பெற்று தரும் வரை ஓய மாட்டோம். இதுகுறித்து காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவை சந்தித்து முறையிட உள்ளோம். தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளோம்.
ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்
குற்றவாளிகளை கைது செய்து வழக்கை விரைவந்து நடத்த வேண்டும். படுகொலை செய்யப்பட்ட வசீம் அக்ரம் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். கூலிபடை சென்னையில் எப்படி இயங்குகிறது என்பதை கண்டறிந்து ஒடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story