ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு
ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த மாணவனை அனைவரும் பாராட்டினர்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் 28 பட்டாளியன் என்.சி.சி.மாணவர்களுக்கான பிட் இந்தியா 3 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பட்டாளியன் சி.ஓ. எஸ்.வி. யாதவ் தலைமை வகித்தார். இதில் எஸ்.பி.கே.கல்லூரி என்.சி.சி.மாணவர் வெங்கடேஷ் முதலிடம் பிடித்தார். தலைவர் சுதாகர் மற்றும் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் ஆகியோர் சாதனை படைத்த மாணவனை பாராட்டினர். விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி முதல்வர் சுந்தர பாண்டியன் பரிசு வழங்கினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story