மாவட்ட செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு + "||" + Conference

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெம்பக்கோட்டை ஒன்றியம் மாநாடு நடைபெற்றது.
தாயில்பட்டி, 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெம்பக்கோட்டை ஒன்றியம்23-வது மாநாடு வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தாலுகா தலைமையிடமாக உள்ள வெம்பக்கோட்டையில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். வெம்பக்கோட்டை துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவா, சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. கட்டுமான தொழிலாளர் மாநாடு
கோவில்பட்டியில் கட்டுமான தொழிலாளர் மாநாடு நடந்தது.