லாட்டரி சீட்டு விற்றவர் கைது
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் 3 நம்பர் லாட்டரி மற்றும் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் வைத்து ரமேஷ் விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனே ரமேசை கைது செய்து அவரிடமிருந்து ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story