கடையநல்லூர் முகாம்களில் ஒரே நாளில் 3,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 3,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அச்சன்புதூர்:
கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் நேற்று 18 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 3 ஆயிரத்து 417 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் கோவிசீல்டு முதல்கட்டமாக 2,031 பேருக்கும், இரண்டாவது கட்டமாக 530 பேருக்கும், கோவேக்சின் முதல் கட்டமாக 732 பேருக்கும், இரண்டாவது கட்டமாக 124 பேருக்கும் போடப்பட்டது. இவ்வாறு நேற்று நடந்த முகாம்களில் நகர முழுவதும் மொத்தம் 3,417 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நகராட்சி சார்பில் தடுப்பூசி போடும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் பிரிட்ஜ் வழங்கப்படும் என அறிவிப்பு செய்ததால் கடையநல்லூர் நகர் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். முகாம் தொடங்கிய சில மணி நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக காத்திருந்த நிலையில், சில இடங்களில் தடுப்பூசி முடிவடைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story