வியாபாரிகளுக்கு தேவையான நிதியுதவியை வங்கிகள் வழங்க அறிவுறுத்தி உள்ளோம்
சாலையோர, சிறுதொழில் முனைவோர்களுக்கு தேவையான நிதியுதவி வழங்கி, கொரோனா பாதிப்பில் இருந்த அவர்கள் மீள உதவ வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விருதுநகர்,
சாலையோர, சிறுதொழில் முனைவோர்களுக்கு தேவையான நிதியுதவி வழங்கி, கொரோனா பாதிப்பில் இருந்த அவர்கள் மீள உதவ வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வியாபாரிகளுக்கு நிதியுதவி
வங்கியின் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை சவுடாம்பிகா என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் பங்ேகற்றனா். பின்னர் அவர்கள் 6,681 பயனாளிகளுக்கு ரூ.196 கோடி நிதி உதவி வழங்கினர்.
பின்னா் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- கொரோனா காலத்திற்கு முன்பே சாலையோர வியாபாரிகள், சிறு தொழில் முைைேவாா், விவசாயிகளுக்கு தேவையான நிதி உதவி செய்ய மத்திய அரசு பல்ேவறு திட்டங்களை அறிவித்து அவர்களுக்கு உதவி செய்ய வங்கி அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளது.
அதிலும் கொரோனா காலத்தில் சாலையோர வியாபாரிகள், சிறு தொழில் முனைேவாா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டியது வங்கிகளின் கடமை.
வாழ்வாதாரம் பாதிப்பு
குறிப்பாக, சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை செய்வதற்கு தனி ஒரு நபராக இருந்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிலையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதேபோன்று சிறு தொழில் செய்வோரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்து வருகின்றனர். சாலையோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் நிதி உதவி வழங்க வேண்டும். அதே போன்று சிறுதொழில் செய்வோருக்கு அந்த பகுதியில் அவர் வசிக்கிறார் என்பதை மட்டும் நகராட்சி நிர்வாகத்திடம் உறுதி செய்ய வேண்டும்.
பாதிப்பில் இருந்து மீள வேண்டும்
வேறு எந்த ஆவணமும் தேவையில்லை என்ற நிலையில் அவர்களுக்கு தேவையான நிதி உதவியை வங்கி அதிகாரிகள் செய்ய வேண்டியது அவசியம். மத்திய அரசு அவர்களுக்கு ஜாமீன் வழங்குகிறது.
மத்திய அரசு தரும் நிதி ஏழை, எளிய சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறுதொழில் செய்வோருக்கு சென்றடைகிறதா என்பதை நாடு முழுவதும் தொடர்ந்து காணொலி மூலம் ஆய்வு செய்கிறோம். பாதிப்புகளில் இருந்து சாலையோர வியாபாரிகள் மீள வேண்டும் என்பதே இதன் நோக்கம். அவர்கள் இதன் மூலம் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் எங்களுக்கு நிதி உதவி வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வங்கி அதிகாரிகள் உதவிகளை செய்ய வேண்டும்.
வரவேற்பு
இதைத்தான் மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இதற்காக நான் பிரதமருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குனருமான பார்த்தா பிரதாப் சென்குப்தா, மான்ராஜ் எம்.எல்.ஏ. மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த மத்திய மந்திரிகளை, கலெக்டர் மேகநாத ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கஜேந்திரன், பாண்டுரங்கன், பொன்ராஜ், எஸ்.கே.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story