மாவட்ட செய்திகள்

கணவரின் அண்ணன் மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை; கள்ளக்காதல் விவகாரமா? + "||" + Woman commits suicide by jumping into lake with husband nephew

கணவரின் அண்ணன் மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை; கள்ளக்காதல் விவகாரமா?

கணவரின் அண்ணன் மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை; கள்ளக்காதல் விவகாரமா?
உன்சூர் அருகே கணவரின் அண்ணன் மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். கள்ளக்காதல் விவகாரமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மைசூரு:

மாயம்

  மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா உத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷீலா(வயது 37). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இவரது கணவரின் அண்ணன் மகன் குமார்(27). இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷீலாவும், குமாரும் வீட்டில் இருந்து மாயமாகி இருந்தனர்.

  இதனால் குடும்பத்தினர் ஷீலாவையும், குமாரையும் அக்கம்பக்கம் தேடிபார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை. இதுகுறித்து உறவினர்கள், பிளிகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஷீலாைவயும், குமாரையும் தேடிவந்தனர்.

ஏரியில் குதித்து தற்கொலை

  இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் ஷீலா, குமார் ஆகிய 2 பேரின் செல்போன்கள் உத்தூர் கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் செல்போன்களை கைப்பற்றினர். இதனால் 2 பேரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

  இதையடுத்து தீயணைப்பு படையினரை வரவழைத்து ஏரியில் 2 பேரின் பிணம் கிடக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாயமானதாக தேடப்பட்ட குமார், பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஆனாலும் ஷீலாவின் உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கள்ளக்காதல் விவகாரமா?

  ஆனால் ஷீலாவுக்கும், குமாருக்கும் கள்ளதொடர்பு இருந்ததா?, கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஏரியில் ஷீலாவின் உடல் தேடும் பணி நடந்து வருகிறது.