மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் நேற்று 1,356 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். + "||" + Corona vaccination special camp at 1,356 centers in Salem district

சேலம் மாவட்டத்தில் நேற்று 1,356 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 1,356 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சிறப்பு முகாம்
கொரோனாவின் 3-வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மெகா சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,356 மையங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் மாநகராட்சி பகுதிகளில் 200 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கலெக்டர் ஆய்வு
மாவட்டத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம்களுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாமில் பொதுமக்களிடம் முதல் தவணை அல்லது 2-வது தவணை கொரோனா தடுப்பூசியா? என்று கேட்கப்பட்டு செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு மையங்களிலும் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். தாதகாப்பட்டி மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, ஜாரி கொண்டலாம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி மையங்களை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 லட்சம் பேருக்கு....
இதேபோல் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சகாதேவபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணக்காடு காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, 'சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாம்களில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் திரளான பொதுமக்கள் மையங்களுக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தினர் என்றனர்.
76 ஆயிரம் பேருக்கு...
சேலம் மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 45 ஆயிரத்து 573 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 30 ஆயிரத்து 523 பேரும் என மொத்தம் 76 ஆயிரத்து 96 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசிக்கப்பட்டவை