மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள் + "||" + The general public showed interest in paying for the corona vaccine

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
பெரம்பலூர்:

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று 193 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 400 இடங்களிலும் நடந்தது. முகாமிற்கு வந்தவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டு 84 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெற்ற இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. சில இடங்களில் முகாம் இரவு 8.30 மணி வரை செயல்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் சில முகாம்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், முகாம் சீக்கிரமே முடிந்து விட்டது. இதனால் அங்கு தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 600 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தன. இதில் அரியலூர் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 386 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் இலக்கை நெருங்கியிருந்தாலும், அதனை எட்டவில்லை. தடுப்பூசி முகாமிற்கான பணியில் 3,387 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் 24 ஆயிரத்து 82 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி முகாமிற்கான பணியில் 1,200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது. இதனால் அந்த முகாமிற்கு தடுப்பூசி போட ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரம் அருகே உள்ள 177 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினரிடம் இருந்து திரும்ப பெற நடவடிக்கை
தாம்பரம் அருகே உள்ள 177 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினரிடம் இருந்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
2. தடுப்பூசி முகாமில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
3. ஒரே நாளில் அதிக தடுப்பூசி, தமிழகத்திற்கு 4-வது இடம்
ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற கணக்கில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இணையத்தில் சரியாக பதிவு செய்யாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
4. மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
5. ஈரோடு மாவட்டத்தில் நாளை 847 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்; 1 லட்சம் பேருக்கு செலுத்தப்படுகிறது
ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.