வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
பெரம்பலூர்:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனால் சதுர்த்தியன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் 2 அடி வரையிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை செய்து 3 நாட்கள் வழிபட்டனர். மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் பறிமுதல் செய்தனர். அதில் சில சிலைகள் அன்றைய தினமே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்நிலையில் வீடுகளில் 3 நாட்கள் வழிபட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நேற்று அருகே உள்ள ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்தனர்.
Related Tags :
Next Story