கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Sept 2021 3:16 AM IST (Updated: 13 Sept 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் சரவணனின் மனைவி தீபா(வயது 38). இவர் தா.பழூரில் தையல் பயிற்சி பள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் சரவணனின் நண்பரான தாதம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரமோகனின் மகன் சக்திவேல் என்பவர், தீபாவிடம் இருந்து ரூ.45 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கொடுத்த கடனை திருப்பி கேட்டபோது தீபாவை தகாத வார்த்தைகளால் சக்திவேல் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தா.பழூர் போலீசில் தீபா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story