சென்னையில் ஒரே நாளில் 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி - மாநகராட்சி தகவல்


சென்னையில் ஒரே நாளில் 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி - மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 13 Sept 2021 5:19 AM IST (Updated: 13 Sept 2021 5:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஒரே நாளில் 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. அதில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 1,600 சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்த முகாம்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்டனர்.அந்தவகையில் நேற்று சென்னையில் காலை 10 மணி முதல் இரவு 8.45 மணி வரை நடைபெற்ற இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 1 லட்சத்து 85 ஆயிரத்து 320 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேற்கண்ட தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Next Story