புனேவில் இருந்து 13½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன


புனேவில் இருந்து 13½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
x
தினத்தந்தி 13 Sep 2021 9:39 AM GMT (Updated: 13 Sep 2021 9:39 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 67 லட்சத்து 87 ஆயிரத்து 290 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இதுவரை 54 லட்சத்து 7 ஆயிரத்து 60 தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த 2 விமானங்களில் 113 பெட்டிகளில் 13 லட்சத்து 53 ஆயிரத்து 160 ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story