தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2021 4:25 PM IST (Updated: 13 Sept 2021 4:25 PM IST)
t-max-icont-min-icon

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி:
தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணி காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவல் பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story