மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல் பிசியோதெரபி டாக்டர் சாவு


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்  பிசியோதெரபி டாக்டர் சாவு
x
தினத்தந்தி 13 Sept 2021 5:36 PM IST (Updated: 13 Sept 2021 5:36 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பிசியோதெரபி டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

தேவதானப்பட்டி:
தேனி அருகே உள்ள போடேந்திரபுரத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 30). இவர் கோவையில் ஒரு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக ஆக பணிபுரிந்து வந்தார். இவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு தனது சொந்தஊருக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தார். 
பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின்ரோட்டில் சாத்தாகோவில்பட்டி பிரிவு அருகே வந்தபோது தேனியில் இருந்து திண்டுக்கல் சென்ற லாரி மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கீழே தவறி விழுந்த கோபிநாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் மணியகாரன்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (30), அருகில் அமர்ந்திருந்த ஸ்டாலின் (30), ரூபன்குமார் (34) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் தேனி அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story