மாவட்ட செய்திகள்

விநாயகர் சிலையை கரைக்கும்போது செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் சாவு + "||" + Electrician dies after falling into Sembarambakkam lake while dismantling Ganesha statue

விநாயகர் சிலையை கரைக்கும்போது செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் சாவு

விநாயகர் சிலையை கரைக்கும்போது செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் சாவு
விநாயகர் சிலையை கரைக்கும்போது செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் சாவு.
பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த சம்பந்தம் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது38), எலெக்ட்ரிசீயனாக வேலை செய்து வந்தார். நேற்று மாலை தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றார். மகன்களை ஏரியின் 5-வது மதகின் அருகே நிறுத்தி விட்டு ஏரியில் விநாயகர் சிலையை கரைக்கும் போது திடீரென நிலைதடுமாறி ஏரியில் விழுந்தார்.


இதை பார்த்ததும் அவரது மகன்கள் அலறினார்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்க முயன்றனர். ஆனால் பாரதிராஜா ஏரியில் மூழ்கினார். இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கி கிடந்த பாரதிராஜாவை் சடலமாக மீட்டனர்.

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன பாரதிராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2. கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
3. கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் சாவு
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
4. கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு துக்கம் தாங்காமல் அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால், துக்கம் தாங்காமல் தாய் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. நீடாமங்கலம் அருகே பரிதாபம்: பெட்ரோல் கேன் மீது மெழுகுவர்த்தி விழுந்து தீப்பற்றியதில் வியாபாரி கருகி சாவு
நீடாமங்கலம் அருகே பெட்ரோல் கேன் மீது மெழுகுவர்த்தி தவறி விழுந்து தீப்பற்றியதில் வியாபாரி உடல் கருகி இறந்தார்.