தூத்துக்குடியில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2021 5:46 PM IST (Updated: 13 Sept 2021 5:46 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்து்க்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கோபிநாத், மாநில தலைவர் சிவக்குமார், பொருளாளர் சரவணன், அமைப்பு செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பிரசார செயலாளர் சுமதி, மாநில தலைமை நிலைய கோதண்டம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு வழங்கியது போல 11 சதவீத அகவிலைப்படி உயர்வை பொருளாதார காரணங்களை காட்டாமல் 1.7.2021 முதல் உயர்த்தி வழங்கிடவேண்டும். அகவிலைப்படி வழங்கப்படாத பணியாளர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்தவாறு மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாத அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவன பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இழப்பீடும், வாரிசுகளுக்கு அரசு பணியும் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் முரளி, சோனை கருப்பையா, ராஜன், ஜெயச்சந்திரராஜா, சுவாமிநாதன், கவிதா, உமாசங்கர், மாநில செயலாளர்கள் ஞானஜோதி, விஜயகுமார், பரமேஸ்வரன், மரியமாதவிசெல்வி, ஓய்வூதிய சங்க தலைவி ஜெயசீலி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


Next Story