இருதரப்பினர் மோதல்; 18 பேர் மீது வழக்கு
உடன்குடியில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயன். கூலி ெதாழிலாளி. இவர் சம்பவத்தன்று கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது அவர்களுக்கும், உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
பின்னர் கீழ நாலுமூலைக்கிணற்றைச் சேர்ந்த சிலர் வேனில் வந்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்களை தாக்கினர். இதில் காயமடைந்த முத்துகுமார், சுடலைக்கனி, எஸ்தர், முத்துகனி, மாதவி ஆகிய 5 பேரும் உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், விஜயன், சென்னி மற்றும் ஒரு பெண் உள்பட 18 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story