மாவட்ட செய்திகள்

பொறியாளர் வீட்டில் நகை திருட்டு + "||" + Engineer home jewelry theft

பொறியாளர் வீட்டில் நகை திருட்டு

பொறியாளர் வீட்டில் நகை திருட்டு
திருச்செந்தூரில் பொறியாளர் வீட்டில் நகை திருடு போனது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கார்த்திக் (வயது 31). பொறியாளர்.  கடந்த 10-ந் தேதி மாலையில் தனது பெற்றோரை பார்க்க அவர் பாளையங்கோட்டைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலையில் திருச்செந்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் இரும்பு கிரில் கேட்டின் பூட்டும், மரக்கதவு பூட்டும் உடைந்து கிடந்தது. பதறிப்போன அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மர பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 250 மில்லி கிராம் தங்க காசு, இரும்பு பீரோவில் இருந்த தங்க சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 5¼ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மோகன்காந்தி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு
அருப்புக்கோட்டையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு போனது.
3. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
அரசு போக்குவரத்து கழக டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
4. மயிலத்தில் தனியார் விடுதியில் தம்பதியிடம் 18 பவுன் நகை திருட்டு 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
மயிலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தம்பதியிடம் 18 பவுன் நகையை திருடிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. வீடுகளில் 6 பவுன் நகை திருட்டு
வீடுகளில் 6 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.