உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடத்துக்கு முதன்முறையாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமனம்
உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடத்துக்கு முதன்முறையாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டபோலீஸ் துறையில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 5 சப்-டிவிசன்கள் உள்ளது. இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு உயர் அதிகாரியாக செயல்படுவார். அந்த பணியிடத்துக்கு பெரும்பாலும் குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இதைத் தவிர பதவி உயர்வு மூலமாகவும் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம்.
தற்போது முதன்முறையாக உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடத்துக்கு ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரேயா குப்தா கூடுதல் துணை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அங்கு பணியில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி மதுரை புறநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story