கம்பத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கம்பத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கம்பம்:
டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் காவலர் சபியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கம்பம் காந்தி சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கப்பாண்டி, தொகுதி செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் மதன்சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை செயலாளர் இசைமதிவாணன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பெண் காவலர் சபியா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story