மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சோதனை சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவு + "||" + The checkpoint should be set up and monitored 24 hours a day

திருப்பத்தூர் மாவட்டத்தில் சோதனை சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சோதனை சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கண்காணிக்க வேண்டும்

மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்  இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. எனவே நமது. மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்து 24 மணி கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். நகர்புறத்தில் தேவைப்படும் இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து அங்கும் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.

பறக்கும் படை அமைத்து பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா என கண்காணிக்க வேண்டும். மேலும் வார்டு உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப் படுகிறதா என பார்வையிட வேண்டும்.  பொதுமக்களுக்கு தவறான செய்திகள் அல்லது எதிர்மறையான செய்திகளை தெரிவிக்க வேண்டாம்.

ஒன்றிணைந்து

புகார்கள் ஏதேனும் பெறப்பட்டால் அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து திறம்பட பணிபுரியவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திருப்பத்தூர் சப்-கலெக்டர்  அலர்மேல்மங்கை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, துணை கலெக்டர் பானுமதி, வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் உள்பட அனைத்து தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை