மாவட்ட செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி + "||" + accident

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி
கார் மோதி தொழிலாளி பலியானார்.
தொண்டி, 
தொண்டி அருகே உள்ள சோளியக்குடி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 55). விவசாய கூலித் தொழிலாளி. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது பின்னல் அதி வேகமாக வந்த கார் காளிமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு சென்று காளிமுத்து உடலை கைப்பற்றி திருவா டானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காளிமுத்து குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். சம்பத்தில் பலியான காளிமுத்துவிற்கு பஞ்சு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி தொழிலாளி பலி
கார் மோதி தொழிலாளி பலியானார்.
2. கார் மோதி தொழிலாளி பலி
ராமநாதபுரம் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.
3. கார் மோதி தொழிலாளி பலி
கார் மோதி தொழிலாளி பலி