மாவட்ட செய்திகள்

4 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார் + "||" + Draft polling list for 4 constituencies

4 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

4 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில்உள்ள 4 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டார்.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில்உள்ள 4 தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டார்.

கலெக்டர் வெளியிட்டார் 

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அரசியில் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

மாற்றம் இல்லை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,122 முதன்மை வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரையின்படி, வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு மாறுதல் முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில், அவை மாற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி ஆற்காடு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 2 பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பாகம் எண் 134-ல் இருந்து ஒரு பிரிவு பாகம் 135-ல் சேர்க்கப்பட்டுள்ளது. 138 -ல் இருந்து ஒரு பிரிவு பாகம் 133-ல் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குச்சாவடி இடம் மாற்றம், பெயர் மாற்றம் செய்தல் எதுவும் இல்லை.

ஆட்சேபனை

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள் அலுவலகங்களான ராணிப்பேட்டை, அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலகம், உதவி வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்களான ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாறுதல்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி அவர்களின் ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகள் பிரமுகர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் யாருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் தங்களது எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட 7 தினங்களுக்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.