திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி விற்ற 2 வாலிபர்கள் கைது


திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி விற்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 Sept 2021 9:16 PM IST (Updated: 13 Sept 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி விற்ற 2 வாலிபர்கள் கைது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பெரிய பையுடன் வந்த இரண்டு நபர்கள் போலீசாரை கண்டதும் வேகம் எடுத்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். மேலும் அவரிடம் இருந்த ரொக்கப் பணம் ரூ.20 ஆயிரத்தையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சட்டவிரோதமாக கஞ்சா விற்றதாக திருமழிசை உடையார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (வயது 22), சிலம்பரசன் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story