உரம் கலந்த தண்ணீரை குடித்தவர் வாலிபர் பலி


உரம் கலந்த தண்ணீரை குடித்தவர் வாலிபர் பலி
x
தினத்தந்தி 13 Sept 2021 9:33 PM IST (Updated: 13 Sept 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

உரம் கலந்த தண்ணீரை குடித்தவர் வாலிபர் பலி

காவேரிப்பாக்கம்

பாணாவரத்தை அடுத்த கீழ்வீராணம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 28). இவரது தம்பி விநாயகம் (26). மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விவசாயத்திற்காக தண்ணீரில் உரம் கலந்து வைத்திருந்ததை தண்ணீர் என நினைத்து விநாயகம் குடித்து உள்ளார்.

இதில் அவருக்கு வயிற்றில் உபாதை ஏற்பட்டது. இதனையடுத்து இவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story