அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
போடிப்பட்டி,
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா தலைமை தாங்கினார். மேலும் தலைவர் கண்ணம்மாள், செயலாளர் பொன்னுத்தாய், பொருளாளர் கமலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மின்னல்கொடி, உமாபதி ஈஸ்வரன், முன்னாள் செயலாளர் மாவளப்பன்ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் விதிகளின்படி குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850-ஐ அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்பநல நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவப்படி மாதம் 300 மற்றும் மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story