மாவட்ட செய்திகள்

செய்யாறு அருகேவிவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு + "||" + 7 poun jewelery theft at farmer's house

செய்யாறு அருகேவிவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

செய்யாறு அருகேவிவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை திருட்டு
செய்யாறு

செய்யாறு அருகே திருப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டி (வயது 68) விவசாயி. இவர் தன் மகள் பவித்ரா சீமந்த விழாவுக்காக வீட்டை பூட்டி கொண்டு திருத்தணிக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து கோட்டி கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்.