விநாயகர் சிலையை கரைத்துவிட்டு குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துவிட்டு குளித்த சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
பூந்தமல்லி,
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் கவுதம் (வயது 11). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை போரூரை அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள தன்னுடைய மாமா ரவி என்பவரது வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.
நேற்று மாலை கவுதம், தனது உறவினரின் மகனுடன் நூம்பலில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைக்க சென்றார். குளத்தில் விநாயகர் சிலையை கரைத்த பின்னர், அந்த குளத்தில் இருவரும் குளித்து கொண்டிருந்தனர்.
நீரில் மூழ்கி பலி
அப்போது எதிர்பாராவிதமாக குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற கவுதம், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், குளத்தில் மூழ்கி பலியான கவுதம் உடலை மீட்டனர்.
மதுரவாயல் போலீசார் கவுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story