விநாயகர் சிலைகள் கரைப்பு


விநாயகர் சிலைகள் கரைப்பு
x
தினத்தந்தி 13 Sept 2021 10:03 PM IST (Updated: 13 Sept 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூர்,
விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிங்க வாகன விநாயகர் சிலை 9 அடி உயரத்தில் வைக்கப்பட்டு 108 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேஷ்வரன், செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் வாகனத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் விநாயகர் சிலைகளுடன் 5 பேர் வாகனத்தில் புறப்பட்டு சென்று தாராபுரம் ரோட்டில் பி.ஏ.பி. வாய்க்காலில் சிலைகளை கரைத்தனர்.

Next Story