திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,512 ஆக உயர்ந்துள்ளதாக கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,512 ஆக உயர்ந்துள்ளதாக கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,512 ஆக உயர்ந்துள்ளதாக கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
திருப்பூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வினீத், வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் அமீது, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1,500 வாக்காளர்களுக்கு மேல்...
கூட்டத்தில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1-1-2022-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து, பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
8 சட்டமன்ற தொகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக 19 வாக்குச்சாவடிகள்
அதன்படி தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாற்றமில்லை. காங்கேயம் தொகுதியில் புதிதாக 1 வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டு 295 வாக்குச்சாவடியாக உயர்ந்துள்ளது. அவினாசி தொகுதியில் புதிதாக 1 வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டு 313 வாக்குச்சாவடியாக அதிகரித்துள்ளது. திருப்பூர் வடக்கு தொகுதியில் 11 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு 373 வாக்குச்சாவடியாக உயர்ந்துள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு 242 வாக்குச்சாவடிகள் உள்ளன.
பல்லடம் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு 410 வாக்குச்சாவடியாக அதிகரித்துள்ளது. உடுமலை தொகுதியில் 1 வாக்குச்சாவடி புதிதாக உருவாக்கப்பட்டு 294 வாக்குச்சாவடிகளாக உள்ளது. மடத்துக்குளம் தொகுதியில் 287 வாக்குச்சாவடி அப்படியே உள்ளது. மாற்றமில்லை. மொத்தம் மாவட்டத்தில் 19 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது. இதில் 70 வாக்குச்சாவடிகள் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 45 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. 226 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆட்சேபனைகள்
புதிதாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக கோரிக்கைகள், ஆட்சேபனைகள் குறித்து பொதுமக்கள் நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். வருகிற 20-ந் தேதி, 25-ந் தேதி ஆகிய தேதிகளில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினருக்கு கூட்டம் நடத்தப்பட்டு கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். இதன்பிறகு இறுதி செய்யப்பட்டு கலெக்டர் தலைமையில் மீண்டும் கூட்டம் நடத்தி தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story