அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் திருவிழா
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் திருவிழா நடந்தது.
அரியாங்குப்பம், செப்.
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கிய மாதா திருத்தேரில் காட்சியளித்தார்.
தேர் திருவிழாவிற்கு அரியாங்குப்பம் பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்கினார். முன்னதாக புதுச்சேரி பல்நோக்கு சமூக அமைப்பு நிறுவனர் அருமைசெல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயரின் கியூரியா செயலாளர் ஆரோக்கியதாஸ் கலந்துகொண்டார். சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஆரோக்கிய மாதாவை வணங்கினார். நோய் தொற்று காரணமாக தேர் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. அதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர் ஆலயத்தின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் நடைபெற்றது.
Related Tags :
Next Story